ஆலியா பட் – ரன்பீர் கபூர் படத்தின் புதிய போஸ்டர்

ஆலியா பட் – ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து நடித்து பெரும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் பிரம்மாஸ்த்ரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. தர்மா புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


“பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது.  இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்த்ரா, 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் அயன் முகர்ஜி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனுடன் அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கேசரியா…’ பாடலின் ஆடியோவை இணைத்து ஒரு வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!