‘தள்ளி நில்றி’ ராஷ்மிகாவை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்.. காரணம் தளபதி விஜய் தான்

தளபதி 66
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 66.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜா சமீபத்தில் போடப்பட்டது.

இந்த பூஜையில், விஜய்யை திருஷ்ட்டி எடுப்பது, அவருடன் நெருக்கமாக நின்றுகொண்டு புகைப்படம் எடுப்பது போன்ற விஷயங்களை ராஷ்மிகா செய்து வந்தார்.
கலாய்த்த காஜல்

இந்நிலையில், இதனை பார்த்த பிக் பாஸ் பிரபலம், காஜல் பசுபதி, தான் ஒரு விஜய் ரசிகை என்பதினால் பொறாமைப்பட்டு ‘தள்ளி நில்றி’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வந்தாலும், ராஷ்மிகாவின் ரசிகர்கள் காஜல் பசுபதி மீது கோபத்தில் உள்ளனர்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!