பீஸ்ட் ரிலீஸ் – டிக்கெட் விலை அதிரடி உயர்வு

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீசாக இருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பாண்டிச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.


அந்த போஸ்டரில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. 

இதன்படி 3 ஆம் வகுப்பு கட்டணம் 50 ரூபாய் இருந்து 150 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 75 ரூபாயில் இருந்து 175 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், பால்கனி கட்டணம் 150 ரூபாயில் இருந்து  250 ரூபாயாகவும், பாக்ஸ் கட்டணம் 160 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் என்று உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது


இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், கட்டணம் நிரந்தரமாக உயர்த்தப்படவில்லை என்று புதுச்சேரி அரசு விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!