அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்- அடுத்தடுத்து வந்த அப்டேட்

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தமிழக மக்களை கொண்டாட வைத்த ஒரு படம் வலிமை. போனி கபூர், எச்.வினோத், அஜித் 3 பேரின் கூட்டணியின் தயாரான இரண்டாவது படம்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கொரோனாவால் பல பிரச்சனைகளை சந்தித்துவிட்டது, அதனாலேயே படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. நிஜ வசூல் விவரத்தையும் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டிருந்தது.

ஏகே 61
இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத்துடனே இணைந்துள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது, தற்போது படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வந்துள்ளது.

படத்திற்கு மொத்தம் 75 நாட்கள் ஒதுக்கியுள்ளார்களாம், அதில் சென்னையில் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம். வரும் 9ம் தேதி சென்னையில் இருந்து படக்குழு ஹைதராபாத் செல்கிறார்களாம். ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடக்க இருக்கிறதாம். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!