“ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பாடு” – ஏழ்மையான நிலை குறித்து சமந்தா சொன்ன விஷயம்!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சினிமா துறைக்கு வருவதற்கு முன்னால் தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து சமந்தா பேசியுள்ளார்.

அதன்படி சமந்தா அளித்துள்ள பேட்டியில் “நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன். ஆனாலும் பணம் இல்லாததால் படிப்பை இடையிலேயே விட்டு விட வேண்டிய நிலை வந்தது.

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு பெரிய விழாக்களுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் ‘வெல்கம் கேர்ள்’ பணியைக் கூட செய்தேன். அந்த வேலைக்காக எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வருவாயாக கிடைத்தது.

இன்னும் சில நேரங்களில் பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன். அப்படி 2 மாதங்கள் கஷ்டப்பட்டேன்.  

ஒரு சிறிய வருவாய்க்காக மாடலிங் செய்யலாம் என நினைத்த சமயத்தில் என்னை என் குடும்ப உறுப்பினர்களே உனக்கு இது தேவையா என்று கேட்டனர். சமீபத்தில் கூட மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டேன். எனது நண்பர்கள், டாக்டர்கள் உதவியோடு அந்த பிரச்சினையிலிருந்து மீண்டேன்’’ என கூறியுள்ளார். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!