தாயின் கண் முன்னே மனைவியை கற்பழித்த கணவன்..!! நடிகையினால் மறக்க முடியாத துயரம்..!!


கீதா டாண்டன், பாலிவுட்டின் லீடிங் ஸ்டான்ட் வுமன். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் வருங்காலத்தில் ஒரு ஆக்ஷன் டைரக்டராக வேண்டும் என்ற கனவுக் கொண்டிருக்கும் பெண்மணி. ஆனால், பெண்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதற்கு ரியல் லைப் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் கீதா டாண்டன்.

பாலிவுட் படங்களில் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே மற்றும் பர்நீதி சோப்ரா போன்றவர்களுக்கு டூப் போடும் ஸ்டான்ட் வுமன் கீதா டாண்டன் தான். தனது டீனேஜ் வயதில் இருந்தே அங்கும், இங்கும் தாவுவது, விளையாடுவது கீதா டாண்டனின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

கீதா டாண்டனுக்கு 15 வயதிலேயே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. மார்ஷியல் ரேப் எனப்படும் திருமண வாழ்வில் கற்பழிக்கப்படும் கொடுமைக்கு ஆளானவர் கீதா டாண்டன். ஏறத்தாழ மூன்றாண்டு காலமாக இந்த கொடுமைக்குள் சிக்கித் தவித்துள்ளார் கீதா டாண்டன். தன் வாழ்வில் அந்த மூன்று ஆண்டுகளை ஒரு கெட்டக் கனவாக கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார் கீதா


மூன்றாண்டு கால திருமண வாழ்வில் கீதாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. கணவரின் கொடுமைகளை தாங்க இயலாமல், அப்போது கணவர் வீட்டிலிருந்து குழந்தைகளுடன் தப்பித்து செல்ல திடமிட்டுள்ளார் கீதா. அப்போது கீதாவுக்கு கணவன் வீட்டைவிட்டு வெளியேறினால், தங்க வேறு இடம் இல்லை. அந்த சூழலிலும் கீதா வெளியேற முடிவு செய்துள்ளார்.

ஒரு நாள் கீதாவின் மாமியார், கணவனை அழைத்து அவர் முன்னேயே ஆடைகளை கிழித்து கற்பழிக்க கூறியதாகவும், தன் அம்மாவின் பேச்சை கேட்டு சற்றும் எதையும் யோசிக்காமல் தன்னைக் கற்பழித்தார் என கீதா தனக்கு நடந்தக் கொடுமைகளை சமூகத்தின் முன் கூறியுள்ளார்.

இதுப் போன்ற கொடுமைகள் கீதா மட்டுமல்ல, எண்ணிலடங்காத பெண்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மனைவி என்றும் பாராமல் கொடுமை செய்து வந்த கீதாவின் கணவர், ஒவ்வொரு நாளும், கீதாவிடம், நீ என்னிடம் இருந்து தப்பித்து சென்றால் விபச்சாரமோ, செக்ஸ் கிளப்களில் ஸ்ட்ரிப்பர் (ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள்) வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.


ஆனால், அப்படி ஒரு நிலை எனக்கு வராது என்பதில் தீர்க்கமாக இருந்துள்ளார் கீதா.

சிங்கிள் பேரண்ட்டாக இருந்து குழந்தைகளை வளர்ப்பதே கடினம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அதிலும் மும்பையில் என்றால் மிகவும் கடினம். கணவனின் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு தப்பித்து வந்த கீதா. ஆரம்ப நாட்களில் தனது சகோதரியின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

ஆனால், கொடுமைக்கார கணவன், அங்கே வந்தும் கீதாவை கொடுமை செய்து வந்துள்ளான்.

பிறகு அங்கிருந்து குருத்வாரா இடம் பெயர்ந்து சென்றார் கீதா. அப்போது தான் கீதாவின் அப்பா, அங்கே பங்காரா நடன குழுவில் கீதாவுக்கு வேலை வாங்கி தந்துள்ளார். அப்போது சில சமயங்களில் சிலர் கீதாவை விபச்சாரத்தில் தள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து தப்பித்து, எப்படியோ பாலிவுட்டில் புகுந்தார் கீதா.

நடனம் பயின்று பாலிவுட்டுக்குள் நுழைந்தாலும், கீதா தனக்கு வந்த எந்த வாய்ப்புக்கும் நோ சொல்லவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கீதாவை பார்த்த சில இயக்குனர்கள், டெக்னிஷியன்கள் நீ ஸ்டன்ட் வேலை செய்கிறாயா? என கேட்டுள்ளனர். சற்றும் தயங்காமல் ஒகே சொல்லியுள்ளார் கீதா.


அன்று ஓகே ஸ்டன்ட் செய்கிறேன் என கீதா கூறிய போது, அவர் ஸ்டன்ட் பயிற்சி பெற்றது கிடையாது. அதற்கு முன் அவர் ஸ்டன்ட் வேலைகளில் ஈடுபட்டதும் கிடையாது.

முதன் முதலாக நெருப்பு சூழ்ந்த இடத்தில் தான் ஸ்டன்ட் செய்தார் கீதா. அப்போது அவரது முகத்தில் காயங்கள் உண்டாகின. உடனே, கீதாவின் குடும்பத்தார், இந்த வேலை வேண்டாம் என கூறிவிட்டனர். ஆனால், கீதா இது தனக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என நம்பினார்.

ஒரு ஸ்டன்ட் வுமனாக நிறைய கஷ்டமான வேலைகளை செய்தார் கீதா டாண்டன். இவரது துணிவை கண்டு பாலிவுட்டை சேர்ந்த பலர் இவருக்கு ஊக்கம் அளித்தனர். பக்கபலமாக இருந்தனர்.

ஸ்டன்ட் செய்வது எளிதானது அல்ல. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், கரணம் தப்பினால் மரணம் என்ற வாழ்க்கை தான் எங்களுடையது. என்கிறார் கிதா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!