சிம்புவுக்கு வாய் ரொம்ப அதிகம்.. பிரபல சீரியல் நடிகர் அதிரடி பேட்டி

நடிகர் சிம்பு குறித்து பல நடிகர், நடிகைகள் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பிரித்விராஜ் பப்லு

அந்த வகையில் தற்போது நடிகர் பிரித்விராஜ் பப்லு, நடிகர் சிம்பு குறித்து பேசியுள்ளார். அவள் வருவாளா, வாரம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் பப்லு.

இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். படங்களிலும் தோன்றும் பிரித்விராஜ் பப்லு, சிம்பு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் ” உடல் எடையை குறைத்து உள்ளது மிகவும் வியப்பாக உள்ளது. அதற்காக அவரை பாராட்டுகிறேன்.

சிம்புவுக்கு வாய் ரொம்ப அதிகம்
மேலும் ” ஆனால் அதே சமயம் உடம்பை கட்டுக்கோப்பாக அப்படியே மெயின்டெயின் செய்ய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் குண்டாகிவிடுவார் என பல முறை அட்வைஸ் செய்துள்ளேன். சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன் நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் ரொம்ப அதிகம் ” என சிம்பு குறித்து பிரித்விராஜ் பப்லு பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!