துபாயில் நம்பி நாராயணனை கவுரவப்படுத்திய மாதவன்

துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனை கவுரவப்படுத்திய மாதவன்.

இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஆர்.மாதவன். இவர் முதல் முறையாக இயக்குனராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், துபாய் எக்ஸ்போ 2022-வில் திரையிடப்பட்ட “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரைலர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரைலரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவர்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

இந்த உரையாடல் நிகழ்வின் போது ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்துக் கொண்டார். அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆர்.மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் கூறியதாவது.., “பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன்.

, மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எபிஜே.அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில்  ‘வளிமண்டல அழுத்தத்தில் சமநிலையின்மை’ என்ற பதத்தை உடனடியாக புரிந்துகொண்டார். அவரது இயல்பிலேயே உள்ளார்ந்த பகுதியாக பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.


மேலும் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்குத் தெரிவித்ததைக் கேட்டு, அங்கு குழுமியிருந்த மொத்த கூட்டமும் உற்சாகமடைந்தனர்.  


இப்படம் வருகிற ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!