‘அவர் நடிப்பதை போலவே நானும் நடித்தேன்’..!! இயக்குனரிடம் சொன்ன தளபதி..!!!


இளையதளபதி விஜய் இதுவரை நடித்த படங்களில் பலருக்கு பேவரெட் படங்கள் இருக்கிறது. அதிலும் விஜய், ஜெனிலியா இணைந்து நடித்த சச்சின் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம்.

இப்படத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் தான் இயக்கியிருந்தார். அண்மையில் ஒரு பேட்டியில் மகேந்திரன் அவர்கள், என் மகன் இயக்கிய சச்சின் படத்தில் விஜய் நிறைய இடத்தில டைவர்ட் ஆகி ஒரு இடத்திற்கு வருவார். அங்கே மழையில ஜெனிலியாவைப் பார்ப்பார், அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இப்படம் குறித்து விஜய் தெறி படப்பிடிப்பில் என்னிடம், நான் சச்சின் படத்தில் வேற மாதிரி நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் படப்பிடிப்பில் உங்களது மகன் கதையை சொல்லும் போதே நன்றாக நடித்து காட்டுவார். அவரின் நடிப்பை பார்த்து அப்படியே நான் காப்பியடித்து நடித்தேன் சார் என விஜய் விளையாட்டாக கூறியதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!