விஜய்யின் மாஸ்டர் தான் எனக்கு பிடித்த தமிழ் படம் – ராஜமௌலியின் அதிரடி பதில்..

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி  
இந்தியளவில் முக்கிய இயக்குனராக அறியப்படுபவர் S.S.ராஜமௌலி இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் பாகுபலி திரைப்படங்கள் அவருக்கு பிரமாண்டமாக இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது.

மேலும் அப்படமும் இந்தியளவில் பெரிய வசூல் சாதனை செய்த திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.  

ராஜமௌலியின் கவனத்தை பெற்ற மாஸ்டர் 
இந்நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அதனால் தற்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் NTR உள்ளிட்ட பங்கேபெற்று வருகின்றனர்.

அப்படி அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கடைசியாக அவர் பார்த்த தமிழ் படங்களில் கவனத்தை ஈர்த்த திரைப்படங்கள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள ராஜமௌலி “மாஸ்டர் நல்லா இருந்தது, அனிருத் இசை அப்படத்தில் Terrific” என கூறியுள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!