சமந்தா நடிக்கவேண்டிய படத்தில் கமிட்டான அனுஷ்கா.. எந்த படம் தெரியுமா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா.

இவர் உடல் எடை கூடியதன் காரணமாக படவாய்ப்புகள் குறைய துவங்கி, தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அதுமட்மின்றி இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுவதில்லை.

இந்நிலையில், பிரபல கர்நாடக பின்னணி பாடகி, பெங்களூரு நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முதன் முதலில் நடிக்க, நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. முதலில் ஓகே சொன்ன சமந்தா பின்பு, கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இதனால், அவருக்கு பதில் நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!