அஜித் பட நடிகையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழில் ‘பிரியம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவரால் ஒரு முன்னணி நாயகியாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் தமிழில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார். ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ‘ரெட்டை ஜடை வயசு’ படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அஜித்துடன் ‘ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.


இதனை தொடர்ந்து நடிகை மந்த்ரா உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து ஐதராபாத்தில் செெ்ட. செட்டிலாகிவிட்டார் இவருக்கு ஒரு பெண் குழந்தையிருக்கிறது. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘வாலு’. இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

இவர் சினிமாவை அடுத்து பிரபல சின்னத்திரையில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.