பீஸ்ட் எப்படிப்பட்ட படம்: பூஜா ஹெக்டே அளித்த பேட்டி

விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது ட்ரைலர் எப்போது வரும் என்று தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரிலீஸ் தேதி?
படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வலிமை ஹீரோயின் பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு ஹிந்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவரிடம் பீஸ்ட் படம் பற்றி கேட்டபோது அவர் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

ஏப்ரல் ரிலீஸ் என்று மட்டும் அறிவித்தார்கள், ஆனால் தேதி technically இன்னும் அறிவிக்கப்படவில்லையே என கூறி இருக்கிறார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் படம் எப்படி இருக்கும்?
விஜய் உடன் நடித்தது பற்றியும், படம் எப்படி இருக்கும் எனவும் கேட்டபோது பூஜா ஹெக்டே அளித்த பதில் இதுதான்..

“இது ஒரு proper நெல்சன் meets விஜய் படம். இரண்டு உலகமும் இணைந்த நல்ல crossover படம். எனக்கு இந்த வருடம் நல்ல படங்கள் இருக்கிறது என்பதால் நான் அதிகம் ஆர்வத்துடன் இருக்கிறேன். ராதே ஷ்யாம், பீஸ்ட் உட்பட பல நல்ல படங்கள் இருக்கிறது” என பூஜா ஹெக்டே கூறி இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!