சென்னை கலெக்ஷனில் சொதப்பியதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான சூர்யா நடிப்பில் உலகளவில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் இப்படம் வெளியானதில் இருந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், மாஸ் கமர்சியல் படமாக இருந்தது என்ற விமர்சனத்தை பொதுவாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெற்றது.

வசூலில் சொதப்பிய ET !   
இந்நிலையில் நேற்று வெளிவந்துள்ள இப்படம் குறித்த பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி தற்போது ET படத்தின் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது, இப்படம் சென்னையில் முதல்நாளில் ரூ.62 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.

சூர்யாவின் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியும் சென்னையளவில் 1 கோடியை கூட வசூலில் தாண்டவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!