‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் இணைந்த பிரபல நடிகர்

பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் பிரபல நடிகர் நடித்து வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பிரபாஸ் உறுதி செய்துள்ளார்.

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். 

இந்நிலையில் ‘சலார்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ராஜ் நடித்து வருகிறார். இதனை ‘ராதே ஷ்யாம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரபாஸ் உறுதி செய்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் சலார் படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!