பீஸ்ட் பட நடிகையுடன் கைக்கோர்த்த கவின்

நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவின் அடுத்து பீஸ்ட் பட நடிகையுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் அவர் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து அடுத்த படத்தில் கவின் நடிக்கவுள்ளார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது.
 இதில் பணிபுரியும் நடிகர் நடிகைகள், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!