தளபதி 67 படத்திற்காக மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி ! வெளியான புதிய தகவல்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

. இதனிடையே தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி அப்படத்திற்காக விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இணையவுள்ளதாம்.

விக்ரம் படத்தின் ரிலீஸுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேலைகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி 66 பட ஷூட்டிங் போதே தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!