மீண்டும் இணையத்தில் பரவி வரும் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த வசூல் ! குழம்பும் ரசிகர்கள்..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

மேலும் இந்த பிளாக் பஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் கூட்டணி இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றில் மாஸ்டர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மாஸ்டர் படத்தின் வசூல் 40 மில்லியன் (300+ கோடிகள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இணையத்தில் இது குறித்து பேசி வருகின்றனர்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!