யுவன் ஷங்கர் உடன் என்ன பிரச்சனை? உண்மையை உடைத்த போனி கபூர்

வலிமை படத்திற்கு முதலில் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா அதில் இருந்து பாதியில் வெளியேறியதும் அதன் பிறகு ஜிப்ரான் பின்னணி இசை பணிகளை செய்ததும் ரசிகர்கள் அறிந்தது தான்.

அதனால் யுவன் மற்றும் இயக்குனர் வினோத் இடையே என்ன தான் பிரச்சனை ஏற்பட்டது என ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் வலிமை படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் ஹிட் ஆகி இருகிறது என போனி கபூர் தெரிவித்து இருக்கிறார். மேலும் படத்தை பற்றி ரிலீஸ் நேரத்தில் ஒரு ட்விட் கூட போடாத யுவன் இன்று தான் ஒரு ட்விட் பதிவிட்டு இருக்கிறார். ஜிப்ரான் பிஜிஎம் நைஸ் என்று குறிப்பிட்ட அவர் தனது பாடல் மற்றும் விசில் தீமை பாராட்டும் ரசிகர்களும் நன்றி கூறி இருக்கிறார்.

இந்நிலையில் போனி கபூர் அளித்து இருக்கும் பேட்டியில் யுவன் பற்றி பேசி இருக்கிறார். “யுவனுக்கு எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எனக்கு நெருக்கமானவர். யுவன் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது ஹிந்தி படம் ஒன்றில் அவர் இசையமைக்க இருக்கிறார்” என தெரிவித்து உள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!