பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த பிக்பாஸ் ராஜு- நடந்த சுவாரஸ்ய விஷயம்

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றியாளராக கலக்கி வருகிறார் ராஜு. நிகழ்ச்சியை முடித்த அவர் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு அண்மையில் சென்றுள்ளார், அங்கு கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் ராஜு வீடியோ காலில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, நடிகர் விஜய்யை பிக்பாஸ் செல்வதற்கு ஒரு 15 நாட்கள் முன்பு பீஸ்ட் படப்பிடிப்பில் பார்த்தேன்.
அப்போது திடீரென அவரைக் கண்டேன், விஜய் யாராவது புதியதாக செட்டிற்கு வந்தால் கண்டுபிடித்துவிடுவாராம். என்னையும் அழைத்து புதுசா என கேட்க நான் நெல்சனுடன் வேலை செய்துள்ளேன் என கூறினேன்.

பின் கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், என் கண்கள் செமயாக இருக்கிறது என்றார். பின் நான் விஜய்க்காக சிறு வயதில் இருந்து சேர்த்து வைத்து ஒரு புத்தகத்தை காட்டினேன்.
அதை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஆட்டோகிராப் செய்து கொடுத்தார் என ராஜு சந்தோஷமாக கூறியுள்ளார். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!