யார் தான் தலைவர் 169 படத்தை இயக்குவது ! புதிதாக லைன் அப்பில் இணைந்த விஜய் பட இயக்குனர்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தலைவர் 169 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக தேசிங்கு பெரியசாமி, பால்கி, பாண்டியராஜ், கார்த்திக் சுப்ராஜ் என பலரின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. 

அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளார். ஆம் அது வேறு யாருமில்லை விஜயின் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தான்.

நெல்சன் திலீப்குமாரும் தற்போது தலைவர் 169 படத்தை இயக்கவுள்ள இயக்குனர்களின் பட்டியலில் இணைத்துள்ளார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!