பஜாரி என சொன்னவருக்கு பிக் பாஸ் காஜல் பதிலடி

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக வந்தவர் காஜல் பசுபதி. அவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் பசுபதி அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு ஷோவில் கலந்துகொண்டபோது அவர் கத்தியது பற்றி சிலர் ட்ரோல் செய்து இருக்கின்றனர். அவரை பஜாரி என அவர்கள் விமர்சித்து இருக்கும் நிலையில், பதிலடி கொடுத்து இருக்கிறார்.

“லூசு மாதிரி கோவ படாம ஒரு ஷோவில் இருந்து வெளியே வந்தா.. காமெடி பீஸ்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தையில் பேசினா வாய மூடிட்டு இருக்காம கோவபட்டா உடனே பஜாரினு சொல்றது” என காஜல் பசுபதி கோபத்துடன் பேசி இருக்கிறார்.

ரசிகர் ஒருவர் நீங்க பேசாம பிக் பாஸ் OTT போய் இந்த டைம் வெச்சி செய்யுங்க என சொல்ல “கூப்பிட மாட்டாங்களே” என அவர் பதில் கூறி இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!