இதெல்லாம் இந்தியாவிற்கு செட்டாகுமா? – 90 Ml விமர்சனம்.!

படத்தின் கதைக்களம் :

படத்தின் ஆரம்பமே ரீடா என்ற பெயரில் நடித்துள்ள ஓவியா கையில் சிகிரெட்டுடன் தன்னுடைய தற்காலிக பாய் ப்ரெண்டுடன் ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடி வருகிறார்.

கணவன் மனைவி குழந்தை குட்டியுடன் வசித்து வரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஓவியாவை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.

அதன் பின்னர் ஓவியாவுடன் நான்கு பெண்கள் கூட்டு சேர்ந்து மது, சிகிரெட், கஞ்சா என அவரவர் இஷ்டத்துக்கு வாழ்கின்றனர்.

இதற்கிடையில் ஓவியாவின் தற்காலிக காதலும் பிரேக் அப் ஆகிறது. பின்னர் தன்னுடைய தோழிகளில் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஓவியா தீர்வை சொல்கிறார்.

இறுதியில் ஓவியா இன்னொரு காதலனுடன் சேர்ந்தாரா? இல்லையா? இவர்களின் வாழ்க்கை என்னவானது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

ஓவியா மற்றும் நான்கு நண்பர்களின் நடிப்பு :

ஓவியா மற்றும் அவரது தோழியாக நடித்துள்ள அனைவரும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஓவியவா இப்படியெல்லாம் நடிக்கிறார்? என படம் முழுவதும் நம்மை அதிர்ச்சியிலேயே வைத்து கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்பம் :

இசை :

சிம்புவின் பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் ஒன்றும் நம்மை பெரிய அளவில் கவர்ந்திழுக்கவில்லை.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்திற்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே அந்தோணியின் கத்தரியும் படத்தில் கச்சிதமாக வேலை செய்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. லிவிங் டூ கெதர் வாழ்க்கை, ஓரின காதல், கட்டாய திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தைரியமாக காட்டியுள்ளனர்.
2. என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் கணவன் மனைவியின் படுக்கையறை காட்சியில் லிமிட் தாண்டாமல் படத்தை கொண்டு சென்றுள்ளார்.
3. சிம்பு வரும் காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. படம் முழுவதும் தம், சரக்கு, கஞ்சா என கொண்டு செல்வது.
2. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மது, புகையிலை உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்திற்கு விடுதலையே இல்லை.
3. எந்தவித குறிக்கோளும் இல்லாத திரைப்படம்
4. ஆணும் பெண்ணும் சமம் தான் என்றாலும் அதற்காக ஆண்களுக்கு நிகராக சரக்கடிப்பது, தம் அடிப்பது போன்றவையெல்லாம் பெண் சுதந்திரம் என பேசுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.
5, படம் சொல்லும் விசயங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர இந்தியாவிற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் செட்டாகாது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.