அஜித்துக்கு நன்றி சொன்ன சிறுத்தை சிவா! என்ன காரணம்?

அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் வந்திருக்கிறது.

இன்றொடு வீரம் படம் வந்து 8 வருடங்கள் மற்றும் விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. அந்த படங்களுக்காக நன்றி கூறி சிவா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“சாய் சாய்! ஜனவரி 10.. வீரம் மற்றும் விஸ்வாசம் படங்கள் எனக்கு பெரிய ஆசீர்வாதமாக வந்தவை. நன்றி அஜித் சார், அஜித் சார் ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா லவ்வர்ஸ் மற்றும் குடும்ப ரசிகர்கள்” என சிவா ட்விட் செய்து இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!