இடரினும் தளரினும் – விமர்சனம்

நடிகர் நடிகர் இல்லை
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் ராகவ ஹரி கேசவா
இசை சௌமியன்
ஓளிப்பதிவு சகாயம்
ராகவ ஹரிகேசவாவும், இறையன்பும் அண்ணன் தம்பிகள். இதில் இறையன்பு அண்ணன் மீது பொறாமைப்பட்டு மந்திரவாதி ரமணாவிடம் சொல்லி சூனியம் வைக்க சொல்கிறார். இதனால், ராகவ ஹரிகேசவாவும், அவரது மனைவி செலீனா மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள

இறுதியில் சூனியத்தில் இருந்து ராகவ ஹரிகேசவா தனது குடும்பத்தினருடன் தப்பித்தாரா? தம்பி இறையன்பு அண்ணனுக்கு சூனியம் வைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ராகவ ஹரிகேசவா, இறையன்பு, செலீனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மந்திரவாதியாக வரும் ரமணா ஓவர் ஆக்டிங் செய்கிறார். காட்டுவாசி தலைவனாக வரும் ராதாரவி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்ததோடு இயக்கவும் செய்திருக்கிறார் ராகவ ஹரி கேசவா. படம் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறிய பட்ஜெட்டுக்கு உண்டாக தெளிவு, தரம் கூட படத்தில் இல்லை. காட்சிகள் ஆங்கும் இங்குமாக இருக்கிறது. வேண்டுமென்றே பல காட்சிகளை திணித்து இருக்கிறார். சகாயத்தின் ஒளிப்பதிவும் சௌமியனின் இசையும் படத்திற்கு பலவீனம்.

மொத்தத்தில் ‘இடரினும் தளரினும்’ சுமாரகம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!