தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட புதிய வலிமை அப்டேட், என்ன தெரியுமா?

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிரமாண்டமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

மேலும் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸில் எதாவது மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.

ஆனால் படக்குழு வலிமை-யை 13 ஆம் தேதி வெளியிட உறுதியாகவுள்ளனர். அந்த வகையில் தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.

அதன்படி வலிமை படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாகவும், வலிமை வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரமாண்டமாக வெளியாவதை உறுதி செய்துள்ளார் போனி கபூர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!