இதிலும் நம்பர் 1 விஜய் தான்.. பிகில் சாதனையை முறியடிக்க தவறிய வலிமை டிரைலர்

அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்நிலையில், வெளியான 5 நிமிடத்தில் 3.15 லட்சமும், 10 நிமிடத்தில் 1M பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தின் டிரைலர் 10 நிமிடத்தில் 2M பார்வையாளர்களை பெற்று முடியடிக்க முடியாத சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!