சீரியல் நடிகை ரக்ஷிதாவின் சுவாரஷ்ய தகவல்கள்..!!!


சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதாவை பற்றி அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ
ரக்ஷிதா மார்ச் 27ம் தேதி 1984ம் ஆண்டு கன்னட மண்ணில் பிறந்திருக்கிறார். பள்ளி படிப்பை முடித்த இவர் Master’s degree in Journalism and Mass Communication பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.

தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் இவர் கன்னட தொலைக்காட்சியில் Vj வாக ராணி மகாராணி, ஸ்டார் சுவிருசி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.


2013ல் இளவரசி என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமான இவங்க, பிரிவோம் சந்திப்போம் என்ற தன்னுடைய இரண்டாவது தொடரிலேயே கருப்பு மேக்கப் போட்டு நடித்திருப்பார். இதுதவிர மசாலா குடும்பம் என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த தொடர் சரவணன் மீனாட்சி. இப்போது அதில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

வேறு நிறைய ஒப்பந்தங்கள் இருந்ததால் முதல்ல இவங்க சரவணன் மீனாட்சில நடிக்க மறுத்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் தான் சரியாக இருப்பார் என்று அத்தொடர் குழுவினர் எண்ணியதால் ஒப்புக்கொண்டுள்ளார்.


சின்னத்திரையை தொடர்ந்து இவர் ராதா மோகன் இயக்கிய உப்பு கருவாடு படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

2014 விஜய் அவார்ட்டில் (சீரியல்) சிறந்த நாயகிக்காக தேர்வானார். ஆனால் அவங்களுக்கு 2015ல் தான் அந்த விருது கிடைத்தது. இவங்க கன்னடா, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழியிலும் 10க்கும் மேற்பட்ட வெற்றியான தொடர்களில் நடித்திருக்கிறார்.


The Chennai Silks மதுரை கடை விளம்பரம் தான் அவர் நடித்த முதல் விளம்பரம்.
பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, அத்தொடரில் நடித்த தினேஷை காதலிக்க இருவரும் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் Gardening.

சுவாதி சினுகுலு என்ற சீரியல் மூலம் இவங்களுக்கு தெலுங்கிலும் நல்ல பெயர் கிடைத்தது.
கன்னடத்தில் மெகா மந்திரா என்ற தொடர் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து சவிகனசு, பண்டி பரதவ கலா, மானே ஒண்டு மூறு பகிலு, சுப்பிரபாதா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#