அவர் கடைசி படம் தயாரித்தது எனக்கு பெரிய புண்ணியம்: விஜய் சேதுபதி

மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி அவரது கடைசி படத்தை தயாரித்தது தனக்கு கிடைத்த புண்ணியம் என கூறி உள்ளார்.

“நான் கம்யூனிசம் படிச்சது இல்லை. அது பற்றி எந்த அறிவும் எனக்கு இல்லை. சக மனிதர்களை நடத்தும் விதம் தான் கம்யூனிசம் என நான் அவரது செயலில் பார்த்தேன். கம்யுனிசம், பெரியார் சிந்தனைகள் பற்றி யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் தான் படித்த சித்தாந்தத்தை எப்படி எளிமையாக மக்களிடம் எடுத்து சொல்வது என்பதை புரிந்தவர்.”

“ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து விதைப்பார். அவர் படத்தில் நடிப்பதை விட அவர் டிஸ்கஸ் செய்யும் போது ஆயிரம் வார்த்தைகளை ஒரு ஐந்து வார்த்தைகளில் அடக்குவார். மக்கள் பார்க்கும் வகையில் திரைப்படமாக போர் அடிக்காமல் சொல்ல வேண்டிய விஷயம் சென்று சேரும் வகையில் படம் எடுப்பார்.”

“என் வாழ்நாளில் பெரிய புண்ணியம் எஸ்பி ஜனநாதனின் கடைசி படத்தினை நான் தயாரித்தேன் என்பது தான். என் வாழ்நாளில் பெரிய சாபமும் அது அவரது கடைசி படமாக ஆனது தான்.”
இவ்வாறு விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!