வலிமை படத்தின் விசில் தீம் காப்பியா ! ஆதாரத்துடன் நிரூபிக்கும் விஜய் ரசிகர்கள்…

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து சொல்லத் தேவையில்லை அது அனைவரும் அறிந்த விஷயம்.

வலிமை படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருப்பதால் தொடர்ந்து அப்டேட் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான இப்படத்தின் மேக்கிங் வீடியோவை தொடர்ந்து இன்று படத்தின் தீம் மியூசிக் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விசில் தீம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த தீம் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது, ஆனால் எப்போதும் போல விஜய் ரசிகர்கள் தற்போது இதை கலாய்த்து வருகின்றனர்.

ஆம், தெய்வத்திருமகள் படத்தின் பாட்டுடன் வலிமை தீம்-யை ஒப்பிட்டு காப்பி என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!