வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா

அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் மற்றும் டிரைலருக்காக தான் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் எதிர்பார்ப்புக்குரிய வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்காக ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகர் அஜித். இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்றாலும், பெரிதும் பேசப்படுவது இவை தான்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!