மீண்டும் டாப் இடம் பிடித்த ஜெய் பீம் ! IMDb வெளியிட்ட டாப் 10 பிரபல திரைப்படங்கள்..

சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் பிரபல OTT தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான ஜெய் பீம் திரைப்படம் அனைவரிடமும் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

மேலும் நேற்று Google நிறுவனம் 2021-ல் அதிகளவில் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, அதில் ஜெய் பீம் திரைப்படம் தான் முதல் இடம் பிடித்திருந்தது.

இதனிடையே தற்போது IMDb நிறுவனம் மிகவும் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அதில் ஜெய் பீம் முதல் இடம் பிடித்துள்ளது, அதனை தொடர்ந்து 4-ம் இடத்தில் மாஸ்டர் திரைப்படமும், 7-ம் இடத்தில் கர்ணன் திரைப்படமும் இடம் பிடித்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!