ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ஹிட்டா, தோல்வியா?- பிரபலமே கூறிய தகவல்

இயக்குனர் சிவா, நடிகர் ரஜினியை வைத்து முதன்முதலாக இயக்கிய திரைப்படம் அண்ணாத்த.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி வசூலில் பட்டய கிளப்பியது, இடையில் மழை வந்து பட வசூலை கொஞ்சம் பாதித்தது.

ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் அண்ணாத்த திரைப்படம் தோல்வியடைந்துவிட்டது என நிறைய மீம்ஸ் கிரியேட் செய்து கிண்டலடித்து வந்தார்கள். 

அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகை குஷ்புவிடம், அண்ணாத்த திரைப்படம் சீரியல் போல் உள்ளது என நிறைய மீம்ஸ் போட்டு வந்தது, இதுகுறித்து உங்களது கருத்து என்ன என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் மீம்ஸ் பார்ப்பதில்லை, அப்படி வந்தாலும் அவர்களுக்கு பட ரிசல்ட் உள்ளது. இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!