பிரமாண்ட படத்தை தவறவிட்ட நடிகர் அஜித்.. எந்த படம் தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் இதுவரை பல சூப்பர்ஹிட் படங்களிலும், சில பிளாப் படங்களிலும் நடித்துள்ளார்.
அதே போல், அஜித் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.

அப்படி தல அஜித் முதன் முதலில் நடிப்பதாக இருந்து, அதன்படி நடிக்கமுடியாமல் போன திரைப்படம் தான், ஜீன்ஸ்.

ஆம், சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் தானாம்.

அப்போது சில காரணங்களால், அஜித்தால் நடிக்கமுடியாமல் போனதால், இப்படத்தில் பிரஷாந்த் கமிட்டாகி நடித்தார் என்று கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!