15 நிமிடம் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம்.. ராஜமௌலி பட நடிகையின் அதிரடி

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர். ஆர். ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ள இப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஆலியா பட் இப்படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பாலிவுட்டில் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!