நயன்தாரா இடத்தை பிடித்த 51 வயது நடிகை.. முன்னனி நடிகருக்கு ஜோடியாகிறார்..

தெலுங்கில் முன்னனி கதாநாயகராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தீவிர அரசியலுக்கு பிறகு மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றிகரமாக ஓடிய லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் தற்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா இந்த வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனால், இந்த காதாபாத்திரத்தில் நயன்தாராவிற்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மோகன்ராஜா இயக்கி வரும் இப்படத்தை சிரஞ்சீவின் மகன் ராமச்சரன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!