பிரபல நடிகர்கள், நடிகைகளில் படங்கள் ரிலீஸ்! லிஸ்ட் இதோ – ரசிகர்கள் எதிர்பார்த்தது

கொரோனா ஊரடங்கால் சினிமா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பட வேலைகள் நின்று போயுள்ளன. அத்துறை சார்ந்த பலருக்கும் இதனால் நஷ்டம் தான்.

இந்நிலையில் சினிமா படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படம் வெளியானது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படமும் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் வரலட்சுமி போலிசாக நடித்துள்ள டேனி படம் இணையதளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

யோகி பாபு நடித்துள்ள காக் டெயில், அருண் விஜய் நடித்திருக்கும் வா டீல், மம்மி சேவ், அண்டாவ காணோம் ஆகிய படங்களும் இதுபோல ஓடிடி தளத்தில் வெளியாகிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!