இந்தியன் 2 தொடங்குவதில் உள்ள பெரிய சிக்கல், என்ன தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவந்த இந்தியன் 2, திரைப்படம் விபத்து காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதன்பின் கமல் மற்றும் ஷங்கர் தங்களின் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பணியாற்றி வந்தனர். இதனால் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்பது பெரிய கேள்விக்குறியானது.

மேலும் சமீபத்தில் இந்தியன் 2 படக்குழுவினருக்கு இருந்த பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டு மீண்டும் இப்படம் தொடங்கும் என தகவல் பரவி வந்தது.

ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு 60% வரை முடிந்துள்ளதாகவும், நடிகை காஜல் இனி திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என்பதால் அவர் இப்படத்தில் நடித்த பெரும்பாலான காட்சிகள் மீண்டும் வேறுஒரு நடிகை வைத்து எடுக்கவேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி விவேக் நடித்த காட்சிகளும் மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கவேண்டி இருக்கும். இதனால் இந்தியன் 2 மீண்டும் தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!