அந்த விஷயத்தில் விஜய் தான் டாப், செம தகவலோடு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடும் ஒரு நடிகர். அவரது பட தகவலே பெரிய அளவில் கொண்டாடப்படும், பட ரிலீஸ் எல்லாம் திருவிழா கோலம் தான்.

தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மொழிகளிலும் இவரது படங்கள் ராஜ்ஜியம் செய்துள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது விஜய் ரசிகர்களால் ஒரு விஷயம் டிரண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாட்டில் டாப் 5 Theatrical Shares படங்களின் விவரம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த கணக்கெடுப்பில் டாப் 5ல் விஜய்யின் 3 படங்கள் உள்ளன, எனவே விஜய் ரசிகர்கள் அதில் தளபதி தான் டாப் என கொண்டாடி வருகிறார்கள்.

முதல் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம்

மாஸ்டர்
பாகுபலி 2
பிகில்
சர்கார்
விஸ்வாசம்
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!