VIP படத்தால் நடிகர் தனுஷுக்கு வந்த நோட்டீஸ்- உயர்நீதிமன்றம் அதிரடி

இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்து நடித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த படம் VIP/வேலையில்லா பட்டதாரி. நடிகை அமலா பால் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தில் அனிருத் இசை அமைத்திருந்தார்.

படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான VIP-2-வில் தனுஷுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடித்திருந்தார். எனினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் தான் VIP படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் அதில் எச்சரிக்கை வாசகம் உரிய வகையில் இடம் பெறவில்லை எனவும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை சட்டத்தை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகையிலை கட்டுபாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்படி தனுஷ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தனுஷ் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது தொடர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!