எனிமி படத்தின் முழு கதையையும் வெளியிட்டுள்ள வெளிநாட்டு சென்சார் குழு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால்,ஆர்யா,பிரகாஷ் ராஜ், மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்து தீபாவளி ரிலீஸிர்க்காக காத்திருக்கும் படம் தான் எனிமி.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படித்தியிருக்கும் இப்படத்திற்கு இந்தியாவில் U/A சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் திரையிடுவதற்காக அந்நாட்டு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கதைச்சுருக்கம் என்ற பெயரில் முழுக்கதையையும் வெளியிட்டு படக்குழுவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அந்தக்குழு. படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் இந்த தவறால் படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் ஆர்வமும் குறைய வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேரிடாமல் இருப்பதை அந்தந்த படக்குழு உறுதி படுத்தவேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!