முருகதாஸ் தர்பார் படத்திற்கு இவ்வளவு கோடி சம்பளம் வாங்கினாரா? கூறிய விநியோகஸ்தர்

முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவருடன் படம் செய்வதற்கு பல நடிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வந்த தர்பார் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்ததாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து முருகதாஸ் வீட்டிற்கு சென்று விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்ட கதையெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘முருகதாஸ் இந்த படத்திற்காக ரூ 33 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!