முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்- எப்போது தெரியுமா?

விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிவரும் நெல்சன் கைவண்ணத்தில் இப்படத்திற்கு முன் தயாரானது டாக்டர்.

சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படம் விரைவில் உலகம் முழுவதும் ரூ. 100 மேல் வசூல் செய்து சாதனை செய்ய இருக்கிறது. 3வது வாரத்திலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் படம் குறித்து வெளியான தகவல் என்னவென்றால் வரும் நவம்பர் 4ம் தேதி மாலை 6.30 மணிக்கு டாக்டர் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!