‘காதல்’ என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது – பரத் நெகிழ்ச்சி

‘காதல்’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ள படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த முதல் படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில், “16 வருடங்களுக்கு முன்பு. டிசம்பர் 17, 2004 எனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். எனது திரையுலக பயணத்தில் ‘காதல்’ ஒரு மைல்கல். ஐஸ்வர்யா மற்றும் முருகன் அப்போதும், இப்போதும்” எனக் குறிப்பிட்டு, சமீபத்தில் சந்தியாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை பரத் பகிர்ந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!