முக்கிய இயக்குனரின் படத்தில் தனுஷுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் தொடர்ந்து முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ராட்சசன் திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம்குமாரின் படத்தில் தனுஷ் நடிக்கவிருந்தார்.

ஆனால் தற்போது அப்படத்தில் முக்கிய மாற்றம் நடந்துள்ளது. ஆம் தனுஷுக்கு பதிலாக அப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sci-Fi திரைப்படமாக உருவாகும் அப்படத்திற்கு வால் நட்சத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!