கொரோனாவுக்கு பயந்து தியேட்டரை மூட கடைசியில் நடந்த கொடுமை! ஆளில்லா நேரத்தில் நடந்த சம்பவம்

கொரோனா உலகளவில் 20 லட்சம் மக்களை தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.3 லட்சம். இதன் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 21 நாட்களில் முடிவடையே வேண்டிய ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் சினிமா தியேட்டர்களும், மால் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இம்மாதம் வெளியாவதாக இருந்த விஜய் நடிப்பில் மாஸ்டர், சூர்யா நடித்த சூரரை போற்று, தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி ஆகிய படங்கள் தள்ளிப்போயுள்ளன.

ஊரடங்கால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பொருளாதார சிக்கல் நிலவும் நிலையில் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வராததால் தற்போது தியேட்டர்களில் இருக்கும் இருக்கைகளை எலிகள் சேதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு இருக்கைகளும் ரூ 5000 மதிப்புள்ளதாக இருக்கும் நிலையில் எலியிடமிருந்து இருக்கைகளை பாதுக்காக நாள் முழுக்கு மின் விளக்குகளை அனைக்கமுடியாத நிலை எழுந்துள்ளது, மின்சாரம் வீணாகும் நிலையும், தேவையற்ற செலவும் உண்டாகியுள்ளதாம்.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவறுத்தப்பட்டு வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!