இந்த ஆண்டு முன்னணி நடிகர்களின் திரைப்பட விபரம்..!! இப்படியொரு நிலைமையா..?


இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்களின் படங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முன்னணி நடிகர்கள் நடித்த இரண்டு படங்களாவது வெளியாகம். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான நடிகர்களுக்கு ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அஜித் : சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விவேகம். இந்த ஆண்டு முழுவதும் இப்படத்தின் டீசர், டிரைலர்களையே பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினர்.


இந்த படம் சில எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

சூர்யா : ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சி3 தான் சூர்யாவுக்கு வெளியான படம். சிங்கம் படத்தில் இருந்த அதே வேகம் துடிப்பு இந்த படத்திலும் காணப்பட்டது.

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பொங்களுக்கு வரவுள்ளது. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் : விஐபி என்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமான விஐபி-2 மட்டுமே தனுஷ்க்கு வெளியானது. அதே நேரத்தில் ப.பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு, தொடரி, கொடி என்று இரண்டு படங்கள் அவருடைய நடிப்பில் வெளியானது.


ஆர்யா : மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ஆர்யா நடித்திருந்த கடம்பன் என்ற படம் மட்டும் வெளியானது. அதனைத் தொடர்ந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சிம்பு : மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் சிம்பு நடித்திருந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் மட்டுமே இந்த ஆண்டு வெளியானது. அதனையடுத்து சந்தானம் நடிப்பில் வெளியான சக்கப்போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் : மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படம் மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு வெளியானது. கடந்த ஆண்டு, ரஜினி முருகன், ரெமோ ஆகிய 2 படங்களை வெளியிட்டிருந்தார்.


ஜீவா : பேய் படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் போது, காமெடியுடன் பேய் கலந்த கதையில் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் வெளியானது. அவருக்கு கடந்த ஆண்டு, மூன்று படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஷால் : இயக்குனர் மிஷ்கினின் துப்பறிவாளன் படம் மட்டுமே விஷாலுக்கு வெளியான ஒரே தமிழ் படம். மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த படம் வில்லன் வெளியாகியுள்ளது.

சசிகுமார் : இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த கொடிவீரன் வெளியானது. கடந்த ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை, கிடாரி உள்ளிட்ட 4 படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!