தலைவா படத்தின் இந்தி ரைட்ஸ் ரூ. 1.25 கோடிக்கு விற்பனையானது.. ஆனா இப்போ..

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவா.
இப்படத்தை ஸ்ரீ மிஸ்ரி நிறுவனம் சார்பில் சந்திரபிரகாஷ் தயாரித்திருந்தார்.

தலைவா திரைப்படம் பல சவால்களையும், பல சோதனைகளையும் தாண்டி தான் திரையரங்கில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் ” தலைவா படத்தின் இந்தி ரைட்ஸ் ரூ. 1.25 கோடிக்கு விற்பனையானது, ஆனா இப்போ விஜய் அவர்களோட இந்தி மார்க்கெட் ரூ. 25 கோடி வரைக்கும் உயர்ந்திருக்கு. அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தும் தலைவா படத்தில் எங்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை ” என்று கூறினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!