இமை – சினிமா விமர்சனம்


மதுரையில் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நாயகன் சரீஷை காதலிக்கிறார் நாயகி அட்சய ப்ரியா. விபத்தில் சிக்கிக் கொள்ளவிருந்த அட்சய ப்ரியாவை, சரீஷின் அம்மா, தனது உயிரை கொடுத்து காப்பாற்றுகிறார். சரீஷின் தாயாருடைய தியாகமும், அதனால் கார்த்தி தனி மரம் ஆனதும் சரீஷின் மீது அட்சய ப்ரியா காதல் வயப்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.

சரீஷீக்கு முதலில் அட்சய ப்ரியாவின் காதல் புரியாமல் போகிறது. ஒரு கட்டத்தில் அவளது காதலை புரிந்து கொண்டு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில், இவர்களது காதல் போலீஸ் தேிகாரியான அட்சய பிரியாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. இதையடுத்து அவர்களை பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் அட்சய ப்ரியாவின் தந்தை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஒரு கட்டத்தில் இருவரும் பொல்லாப்பால் பிரிகின்றனர். பின்னர் சில வருடங்கள் கழித்து, காதலர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் மீண்டும் சந்திக்கின்றனர். தங்களது காதலை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறாள் அட்சய ப்ரியா. அப்படி இருக்கையில், சரீஷ் அங்கு பெரும் தாதாவாக இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து அவரை நல்வழிப்படுத்தி, தன் நாயகனாக அடைய துடிக்கிறார் நாயகி.


கடைசியில், அட்சய ப்ரியாவின் ஆசை, நிறைவேறியதா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை பிரச்சனை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியதற்காக சரீஷீக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ரவுடியாகவும், காதலனாகவும், பள்ளி மாணவராகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அட்சய ப்ரியா படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ப வந்து ரசிக்க வைக்கிறார். நாயகியின் தோழியாக வரும் ரியா, நாயகனின் நண்பனாக வரும் வெற்றிவேல் மற்றும் மார்த்தாண்டம் படத்தில் காமெடிகளை முயற்சி செய்திருக்கின்றனர்.

நாயகன் – நாயகிக்கு இடையே ஏற்படும் காதல், ரவுடியாகும் நாயகனை திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர போராடும் நாயகி என காதலை வைத்தே படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய் கே.மோகன். வழக்கமான கதையில், சில மசாலாக்களை கலந்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அது ஓரளவுக்கே பலித்திருக்கிறது.

மிக்கு காவில் மற்றும் ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வி.கே.பிரதீப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

மொத்தத்தில் `இமை’ மூடுகிறது. – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!