தல 61 படத்தின் கதை இது குறித்து தான் இருக்குமா! மாஸ் காட்டவுள்ள தல அஜித்..

போனி கபூர் தயாரிப்பில், தல அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

எச்.வினோத் இயக்கி இருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூர் தயாரித்து இருந்தார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும், வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும், தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தல 61 திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி தல 61 படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்குமாம்.

இதில் தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகடிவ் ஷெட் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் தல அஜித் தனது World Tour-ஐ எல்லாம் முடித்த பிறகு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!